ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை: டிடிவி தினகரனுக்கு சம்மன்

Report Print Harishan in இந்தியா

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை கமிஷன் முன் ஆஜராக டிடிவி.தினகரன் மற்றும் கிருஷ்ணப்ரியா உள்ளிட்டோருக்கு தனித்தனியே சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையம் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது.

இந்த ஆணையத்தின் முன் ஜெயலலிதா மரணம் தொடர்புடைய பல்வேறு தரப்பினரும் ஆஜராகி தங்களுக்கு தெரிந்த தகவல்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் விசாரணை ஆணையத்தின் சார்பாக டிடிவி தினகரன், சசிகலாவின் சகோதரர் மகள் கிருஷ்ணப்ரியா, ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் இவர்கள் அனைவரும் அடுத்த 7 நாட்களுக்குள் ஜெயலலிதா மரணம் தொடர்பாக உள்ள ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்