ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த அண்ணன் அழகிரி

Report Print Deepthi Deepthi in இந்தியா

ஸ்டாலின் செயல் தலைவராக இருக்கும்வரை திமுக வெற்றி பெறாது என முக அழகிரி தெரிவித்துள்ளார்.

கருணாநிதி முதலமைச்சாராவர் என்று மக்கள் நம்பியதாலேயே 89 எம்எல்ஏக்கள் கிடைத்தனர். 4 மாதங்களுக்கு முன்பு திமுகவை சாடிய கட்சிகளுடன் ஸ்டாலின் கூட்டணி வைத்துள்ளார்.

மேலும், திமுகவில் இருந்து வந்தவர்களுக்கெல்லாம் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது திமுகவில் இருக்கும் அடித்தட்டு தொண்டனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், திகவில் உள்ள அக்கறையின் காரணமாகவே நான் இதனை தெரிவிக்கிறேன்.

தேர்தலில் வெற்றி பெறவேண்டுமென்றால் தொகுதியில் இறங்கி களப்பணியில் ஈடுபட வேண்டும்.

அதனை தவிர்த்து, வேனில் ஏறி நின்றபடி வாக்குகேட்டால் வெற்றி கிடைக்காது. ஆர்கே நகரில் தினகரன் வெற்றி பெற்றதற்கு அவர் களப்பணியில் ஈடுபட்டதே காரணம். அவர் ஆரம்பம் முதலே களப்பணியில் ஈடுபட்டு வந்தார்.

உதய சூரியன், இரட்டை இலை போன்ற பெரிய சின்னங்கள் அத்தனை ஆண்டுகள் இருந்தும், புதிதாக வந்த குக்கர் சின்னத்திற்கு மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்றால், இவர்கள் இருவர் மீது மக்களுக்கு வெறுப்பு உள்ளதையே இந்த தேர்தல் பிரதிபலிக்கிறது.

பணம் மட்டும் இருந்தால் ஒரு தேர்தலில் வெற்றி பெற முடியாது, உழைப்பும் வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்