நெல்லையில் மீண்டும் பரபரப்பு: இரு குழந்தைகளுடன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி

Report Print Fathima Fathima in இந்தியா

சொத்தை அபகரித்தவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கக் கோரி தன் இரு குழந்தைகளுடன் பெற்றோர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கந்துவட்டிக் கொடுமை தாங்க முடியாமல் குடும்பமே நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று மீண்டும் நபர் ஒருவர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்றுள்ளார்.

நெல்லையின் ஆலங்குளம் அருகே மரந்தை ஸ்கூல் தெருவை சேர்ந்தவர் அசோக்குமார், நாகர்கோவிலில் தனியார் இரும்பு கடையில் வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவி திவ்ய பிரியதர்ஷினி, பிள்ளைகள் கார்த்திக், திவ்யா. நால்வரும் நேற்று மாலை ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.

இவர்களை பொலிசார் உள்ளே அனுமதிக்கவில்லை, இதனால் விரக்தியடைந்த அசோக்குமார் குடும்பத்தினருடன் விஷத்தை குடித்துவிட்டு தீக்குளிக்க முயன்றுள்ளார்.

உடனடியாக பொலிசார் அவர்களை தடுத்து நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தன்னுடைய சொத்துகளையும், பணத்தையும் பிடுங்கி கொண்ட உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இவ்வாறு செய்ததாக பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதுகுறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்