பல் பிடுங்க சென்றவருக்கு உயிர் போன சோக சம்பவம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

மதுரையை சேர்ந்த சுரேஷ் என்ற நபர் தனக்கு பல்வலி ஏற்பட்டதையடுத்து பல்லை பிடுங்க மருத்துவமனைக்கு சென்றதில் அவரது உயிர் பறிபோயுள்ளது.

டென்டல் டூத் கேர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். பல்லைப் பிடுங்குவதற்கு முன் ரத்தப் பரிசோதனை, ரத்த அழுத்தம், எக்ஸ்ரே என எந்தச் சோதனையும் செய்யவில்லை. பல்லைப் பிடுங்கிய உடன் நோயாளியின் நாடித்துடிப்பு குறைந்துள்ளது.

பின்னர் உடலை கென்னத் மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர், செல்லும் வழியில் சுரேஷ் இறந்துவிட்டார்.

இதுகுறித்து இறந்தவரின் மைத்துனர் சொக்கலிங்கம் என்பவர் நம்மிடம் பேசுகையில், 'ரத்த அழுத்தம், எக்ஸ்ரேகூட எடுக்காமல் ஒரு மருத்துவர் எப்படி சிகிச்சை அளிக்க முடியும். இதுபோன்ற போலியான மருத்துவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்