தாஜ்மஹால் அழகு எனப் புகழ்ந்த கணவர்: புகைப்படம் எடுக்க மறுத்த மனைவி

Report Print Arbin Arbin in இந்தியா
162Shares

தன்னை விட தாஜ்மஹால் அழகு எனக் கணவர் புகழ்ந்து பேசியதால் அவருடன் நின்று படம் எடுக்க மறுத்த மனைவியை கணவன் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உபியின் அலிகரில் புதிதாக மணமுடித்த தம்பதி அருகிலுள்ள ஆக்ராவின் தாஜ்மஹாலை கடந்த ஞாயிறு அன்று காணச் சென்றுள்ளனர்.

அதன் உள்ளே நுழைந்தவுடன் தாஜ்மகாலின் அழகைக் கண்டு அந்த இளைஞர் வியந்துள்ளார். தன்னை மறந்தவர் மனைவியை பார்த்து, ‘உன்னை விட தாஜ் எவ்வளவு அழகு.

இதை கட்டிய ஷாஜஹானின் மனைவி மும்தாஜும் எத்தனை அழகாக இருந்திருப்பார்? தாஜ் முன்னால் உனது அழகு ஒன்றுமே இல்லை’ எனத் தன் மனைவியிடம் கூறியுள்ளார்.

இதைக் கேட்டு கோபமுற்ற மனைவியின் முகம் கோபத்தில் சிவந்துள்ளது. அப்போது, தாஜ்மகாலுக்கு வருபவர்கள் அனைவரும் செய்வது போல், அதன் முன்னே போடப்பட்டு சலவை கல் பலகையில் படம் எடுக்க தன் மனைவியை அழைத்துள்ளார் கணவர்.

இதற்கு மறுப்பு தெரிவித்த மனைவி, ‘அழகில்லாத நான் உன்னுடன் படம் எடுக்க மாட்டேன். நீ போய் மும்தாஜ் சமாதியுடன் அதை எடுத்து கொள்’ எனக் கூறியுள்ளார்.

இதனால், கோபமுற்ற கணவர் தன் மனைவியை அங்குள்ள பொதுமக்கள் முன்னிலையில் தாக்கியுள்ளார். இதை பார்த்து அங்கு கூட்டம் சேர்ந்து கொண்டது.

இதை அடுத்து அங்கு வந்த சிஐஎஸ்எப் படை வீரர் கணவன், மனைவி இருவரிடமும் விசாரணை செய்துள்ளார். இதில், இருவருமே தாம் புகார் அளிக்க விரும்பவில்லை எனக் கூறி, ஒருவொருக்கு ஒருவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டனர்.

இதனால், கணவரை மட்டும், ’மீண்டும் மனைவியை அடிக்க மாட்டேன்’ என எழுதி கையெழுத்து வாங்கிவிட்டு அங்கிருந்து அனுப்பியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்