தன்னைத்தானே கழுத்து அறுத்துக்கொண்ட இளைஞர்கள்

Report Print Deepthi Deepthi in இந்தியா
316Shares

புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டு இளைஞர்கள் தனக்குத் தாங்களே கழுத்து அறுத்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவப்பூர் ரயில்வே கேட் அருகே இரண்டு இளைஞர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர், இவர்களை பார்த்த சிலர் அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, விரைந்து வந்த ஊர்தி ஊழியர்கள் இவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதில், ஒருவருடைய பெயர் நாகராஜன், மற்றொருவர் பெயர் தெரியவில்லை. இருவரும் வடமாநில இளைஞர்கள். தற்போதெல்லாம் வட மாநில இளைஞர்கள்தமிழகத்தில் அதிகமாக வேலைக்கு வருகின்றனர்.

அதுபோன்று வேலைக்கு வந்தவர்களாக இருப்பார்கள், கழுத்தை அறுத்துக்கொண்டிருப்பதால், அவர்களால் பேசமுடியவில்லை. குணமானபிறகுதான் அவர்களைப் பற்றிய முழுவிவரங்களும் தெரியவரும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அடிக்கடி ரயில்வே கேட் அருகில் நடமாடுவார்கள். இயற்கை உபாதைக்காக அந்தப் பக்கம் போவார்கள், போகிறபோது நன்றாகப் போகிறவர்கள் வருகிறபோது, அரைமயக்கத்தில்தான் வருவார்கள். ஏதோ போதை வஸ்து பயன்படுத்துகிறார்கள் என்று அங்கிருப்பர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்