அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் ஆர்.கே. நகர் சட்டப்பேரவை தேர்தல்

Report Print Fathima Fathima in இந்தியா
95Shares

தேர்தல் நாளை மறுநாள் நடக்க இருக்கிறது. இன்று மாலை 5 மணியுடன் ஆர்.கே. நகர் சட்டப்பேரவை தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது.

தேர்தல் ஆணையம் முக்கியமான கட்டுப்பாடுகளை ஆர்.கே நகர் தேர்தல் களத்தில் அமல்படுத்தியுள்ளது. தேர்தல் தொடர்பான பிரச்சாரங்களை ஊடகங்கள் வாயிலாக வெளியிடக் கூடாது எனவும், ஊர்வலம், பொதுக்கூட்டம் போன்றவற்றை யாரும் நடத்தவோ, பங்கேற்கவோ கூடாது எனவும், பொழுது போக்கு நிகழ்ச்சி வாயிலாக தேர்தல் பிரச்சாரம் செய்யக் கூடாது எனவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

மேலும் தொகுதிக்கு வெளியே இருந்து வரவழைக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள், கட்சி பணியாளர்கள் உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு மேல் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.

தேர்தல் பிரச்சாரத்திற்காக நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு வழங்கப்பட்ட வாகன அனுமதி செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு மேல் செல்லாது.

வெளியாட்கள் தங்கியுள்ளனரா என அனைத்து திருமண மண்டபம், தங்கும் விடுதிகள் போன்றவற்றில் விசாரிக்கப்படும். இந்த கட்டுப்பாடுகளை மீறினால்

இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது அவை இரண்டும் சேர்த்து வழங்கப்படும்.

258 வாக்குச் சாவடிகளும், 45 சோதனை சாவடிகளும் இந்த இடைத் தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் 15 கம்பெனி துணை ராணுவத்தினரும், வாகன பரிசோதனையில் 75 பறக்கும் படையினரும், 21

கண்காணிப்பு பார்வையாளர்களும், 21 வீடியோ கண்காணிப்பாளர்களும் ஈடுப்பட்டுள்ளனர்.

22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.30.4 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாக்குப் பதிவு முடிந்ததும் ராணி மேரி கல்லூரிக்கு ஓட்டுப் பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டு, 24-ஆம் திகதி

ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். 20 சுற்றுக்குள் ஓட்டு எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்