ஜோதிடரின் பேச்சைக் கேட்டு மகனின் வாழ்வில் விளையாடிய தாய்

Report Print Santhan in இந்தியா
452Shares

தமிழகத்தில் ஜோதிடரின் பேச்சை கேட்டு தாய் ஒருவர், தனது மகனின் பள்ளிப் படிப்பை நிறுத்தி அவரின் எதிர்காலத்தை கேள்விகுறியாக்கியுள்ள சம்பவம் பலரையும் அதிர வைத்துள்ளது.

நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் செல்வி, இவருக்கு விக்னேஷ்குமார்(13) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் செல்வி சில மாதங்களுக்கு முன் ஜோதிடரைப் போய் பார்த்துள்ளார்.

அப்போது அந்த ஜோதிடர் உன் மகன் தனியாக பள்ளிக்கு சென்றால், அவனுடைய உயிருக்கு ஆபத்து என்று தெரிவித்துள்ளார்.

மகனின் உயிருக்கு ஆபத்து என்பதை அறிந்து அதிர்ச்சியைடைந்த அவர், மகனை பள்ளிக்கு அனுப்புவதையே நிறுத்தியுள்ளார்.

இதனால் பெரிதும் விரக்தியடைந்த விக்னேஷ் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அதன் பின்னரே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இது குறித்து குழந்தை நலத்துறையினர் அவரிடம் விசாரித்த போது, மகனின் உயிர் முக்கியம் என்பதால் பள்ளிக்கு அனுப்பவில்லை என்றும் தன்னுடைய மூத்த மகன் 12-ஆம் வகுப்பு படிக்கிறான், அவனை நான் பள்ளிக்கு அனுப்பி தான் வைக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

இதையடுத்து அதிகாரிகள் அவரிடம் இரண்டு நாட்கள் கவுன்சிலிங் கொடுத்ததைத் தொடர்ந்து, தற்போது மகனை பள்ளிக்கு அனுப்புவதற்கு செல்வி சம்மதம் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்