தந்தையை கொலை செய்த மகன்: பொலிசாரிடம் அளித்த வாக்குமூலம்

Report Print Santhan in இந்தியா
335Shares

இந்தியாவில் தந்தையையே மகன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிராவின் தானே பகுதியில் இருக்கும் பிவாண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மா திண்டா, இவருக்கு சுரேஷ் திண்டா என்ற மகன் உள்ளார்.

பட்டப்படிப்பை முடித்த சுரேஷ் திண்டா தந்தை என்று கூட பாராமல் கோடாரியை வைத்து கொடூரமாக கொலை செய்துள்ளான்.

சம்பவத்தை அறிந்த பொலிசார் சுரேஷ் திண்டாவை கைது செய்துள்ளனர், அப்போது பொலிசார் நடத்திய விசாரணை அவன் அளித்த வாக்குமூலம், நான் பட்ட படிப்பை முடித்து நல்ல மதிப்பெண் பெற்ற போதும், வேலை கிடைக்காமல் பரிதவித்தேன்.

எங்கும் வேலை கிடைக்காததால், அப்பாவிடம் சேர்ந்து விவசாய வேலைகளில் உதவியாக இருந்தேன், ஆனால் நாங்கள் பார்த்த விவசாயம் கடந்த மூன்று மாதங்களாக லாபம் இல்லாததால், சாப்பட்டிற்கே மிகவும் கஷ்டப்பட்டோம்.

வேலையும் கிடைக்காமல், வீட்டில் விவசாயமும் இல்லாமல் இருந்ததால், வீட்டில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டது.

கடந்த இரண்டு வரமாக இந்த பிரச்சனை சென்றதால், தந்தையின் திட்டுக்களை பொறுக்க முடியாமல் ஒரு கட்டத்தில் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன், அதன் படி இரண்டு முறை கொலை செய்ய திட்டமிட்டேன் தப்பிவிட்டார்.

இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது கோடாரியை வைத்து அவரை தாக்கி கொலை செய்தேன், அதன் பின் அங்கிருந்து தப்பிய என்னை பொலிசார் கைது செய்து விட்டனர் என்று கூறியுள்ளான்.

கொலை செய்யப்பட்ட தர்மா திண்டாவின் உடலை பொலிசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர், அப்போது மருத்துவர்கள் அவரது முகத்தில் 13 வெட்டுக்காயங்கள் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட அவரது மகன் மீது 302-ம் பிரிவின் கீழ் கொலை வழக்குபதிவு செய்யப்பட்டிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்