ஜெயலலிதாவின் வாரிசு அம்ருதா தான்! உண்மை வெளிவரும்- மருத்துவர் பரபரப்பு தகவல்

Report Print Kabilan in இந்தியா
148Shares

ஜெயலலிதாவின் வாரிசு அம்ருதா தான் என்றும், சோபன்பாபுவின் மகனின் டி.என்.ஏ மற்றும் ஜெயலலிதாவின் டி.என்.ஏ மூலமாக அதனை தன்னால் நிரூபிக்க முடியும் என பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார் அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர்.

அவர் கூறுகையில், ‘ஜெயலலிதாவுக்கு நான் அளித்த சிகிச்சைகளை பார்த்துவிட்டு அம்ருதா என்னை சந்தித்தார். அப்போது ஜெயலலிதா எனது தாய் என்றும், டி.என்.ஏ பரிசோதனைக்கு தயார் என்றும் கூறினார்.

மேலும், சோபன் பாபுவின் மகனும் பரிசோதனைக்கு தயாராக உள்ளதாகவும் கூறினார். இதனைத் தொடர்ந்து, நான் கூறிய அங்க லட்சணம், கை வாகை, நோய் தன்மை ஆகியவற்றை கொண்டு, அம்ருதா தான் ஜெயலலிதாவின் மகள் என்பதை 40 சதவீதம் உறுதிபடுத்த முடியும்.

எனினும், மீதமுள்ள 60 சதவீதத்திற்கு ஜெயலலிதாவின் டி.என்.ஏ மிகவும் அவசியமாகும். ஒரு முக்கிய பிரமுகர் இறக்கும் போது அவரது முடி, ரத்தம் போன்ற ஏதாவது ஒரு டி.என்.ஏ-வை அப்போல்லோ மருத்துவமனையில் எடுத்து வைத்திருப்பர்.

அதனை சட்டப்படியே நீதிமன்றம் மூலமாக கேட்டு பெற முடியும், அம்ருதாவிற்கு தற்போது டி.என்.ஏ டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் டி.என்.ஏ கிடைத்தால் உண்மை தெரிந்து விடும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்