எங்களை காப்பாற்ற யாரும் வரல: 18 நாட்களுக்கு பின் உயிருடன் திரும்பிய மீனவர்களின் கண்ணீர் பேட்டி

Report Print Santhan in இந்தியா
111Shares

கன்னியாகுமரியில் ஓகி புயல் காரணமாக கடலில் மாயமான மீனவர்கள் எங்களைக் காப்பாற்ற எந்த படையும் வரவில்லை என தெரிவித்துள்ளனர்.

ஓகி புயல் வருவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர், தமிழக மீனவர்கள் 10-க்கும் மேற்பட்டோர் ஒரே படகில் மீன் பிடிப்பதற்காக 112 நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென்று புயல் வந்ததால், அவர்கள் சென்ற படகு நிலைகுழைந்து சேதமடைந்ததால், அவர்கள் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.

இதற்கிடையில் ஓகி புயல் காரணமாக கடலில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருவதாகவும், அதற்கான வேலைகள் அனைத்தும் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் இன்று தூத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்ற போது, கடலில் மாயமான 10 மீனவர்களை பத்திரமாக மீட்டுள்ளனர்.

இது குறித்து மீட்கப்பட்ட மீனவர்கள் கூறுகையில், எங்களைக் காப்பாற்ற விமானப்படையோ, கப்பல்படையோ தங்கள் பகுதிக்கு வரவில்லை என கண்ணீருடன் கூறியுள்ளனர்.

மீட்கப்பட்ட மீனவர்களை அப்பகுதி மக்கள் உற்சாகமுடன் வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்