11 மாத பச்சிளம் குழந்தையை கொலை செய்தது ஏன்? தந்தையின் வாக்குமூலம்

Report Print Deepthi Deepthi in இந்தியா
715Shares

நாமக்கல் மாவட்டத்தில் இளம் வயது தந்தை ஒருவர் பிறந்து 11 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார்.

பூபதி- தனலட்சுமி தம்பதியினருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது, விசைத்தறி தொழிலாளியான பூபதி முறையாக வேலைக்கு செல்லமாட்டார்.

இந்நிலையில் தான் இவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது, பிறந்த குழந்தையை பூபதி கொலை செய்துவிட்டு ஒன்றும் தெரியாதது போன்று நாடகமாடியுள்ளார்.

பொலிசார் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.

பூபதி சரியாக வேலைக்கு செல்லாத காரணத்தால் அவரது பெற்றோர் அவரை எப்போதும் திட்டிக்கொண்டே இருந்துள்ளனர், இந்நிலையில் தான் பெண் குழந்தை பிறந்துள்ளது. நீ, இப்படி வேலைக்கு போகவிட்டால் பச்சிளம் குழந்தைக்கு பால் வாங்குவதற்கு பணம் யார் தருவது, என திட்டியுள்ளனர்.

இதனால் கோபமடைந்த பூபதி, குழந்தைக்கு செலவு செய்ய தன்னிடம் பணம் இல்லை என்பதால், இரவு தனது மனைவிக்கு அருகில் தூங்கிகொண்டிருந்த குழந்தையை தூக்கி சென்று பக்கத்து வீட்டுக்காரரின் தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு சடலத்தை அருகிலேயே போட்டுவிட்டு வந்துள்ளார்.

காலையில், மனைவி எழுந்து குழந்தையை தேடியபோது, பூபதியும் ஒன்றும் நடக்காதது போன் அவரும் சேர்ந்து தேடியுள்ளார்.

பூபதியின் இந்த வாக்குமூலத்தை கேட்டு அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர், தற்போது கைது செய்யப்பட்டுள்ள பூபதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்