பெண்களை பலாத்காரம் செய்த தந்தை: வீடியோ எடுத்த மகள்

Report Print Raju Raju in இந்தியா
477Shares

பல பெண்களுக்கு போதை மருந்து கொடுத்து அவர்கள் மயக்கமடைந்த பின் பலாத்காரம் செய்து அதை மகள் உதவியுடன் வீடியோ எடுத்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலத்தின் யமுனா நகரில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.

அசோக்குமார் என்ற நபர் பெண் ஒருவருடன் நட்பாக பழகிய நிலையில் அவர் வீட்டுக்கு சென்று தனது மகளுக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாக கூறி இனிப்பு வழங்கியுள்ளார்.

இனிப்பை அப்பெண் சாப்பிட்ட நிலையில் மயங்கி விழுந்துள்ளார், இதையடுத்து அவரை அசோக்குமார் பலாத்காரம் செய்துள்ளார்.

இதை அருகிலிருந்த அசோக்குமாரின் மகள் வீடியோவாக எடுக்க மயக்கம் தெளிந்த பெண்ணிடம் தந்தையும், மகளும் வீடியோவை காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் பொலிசில் புகார் அளிக்க அசோக்குமாரையும் அவர் மகளையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

இதனிடையில் இதே போன்ற செயலை தங்களிடமும் அசோக்குமார் செய்தார் என மேலும் இரண்டு பெண்கள் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து பொலிசார் அசோக்குமார் மற்றும் அவர் மகளிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்