திருமண நாளில் தம்பதியினருக்கு கிடைத்த அதிர்ச்சி பரிசு

Report Print Deepthi Deepthi in இந்தியா
441Shares
441Shares
ibctamil.com

ஜம்மு காஷ்மீரில் தனியார் பள்ளி ஒன்றில் பணியாற்றிய ஆசிரியரும், ஆசிரியையும் காதலித்து திருமணம் செய்துகொண்டதால் அவர்களது திருமண நாளில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தனியார் பள்ளியில் தாரிக் பத், சுமாயா பஷீர் ஆகிய இருவரும் பணியாற்றியுள்ளனர், பள்ளியில் பணியாற்றும்போது இவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்துள்ளது.

இவர்களது காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்ததையடுத்து, நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

ஆனால் இவர்கள் பள்ளியில் வைத்து காதலித்தது பள்ளி மாணவர்களை பாதிக்கும், இங்கு சுமார் 2,000 மாணவர்களும், 200 பணியாளர்களும் உள்ளனர்.

இதுபோன்ற செயல் இங்குள்ள மாணவர்களை பாதிக்கும் என பள்ளி நிர்வாகம் கூறி இவர்களை இடைநீக்கம் செய்தது.

இந்நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டதால், இவர்களை இனி பள்ளியில் பணியாற்ற அனுமதிக்க கூடாது என கூறி, இவர்கள் இருவரையும் திருமணம் முடிந்த கையோடு பணிநீக்கம் செய்துள்ளது.

இதுகுறித்து தாரிக் பத் கூறுகையில், பெற்றோர்கள் மூலம் நிச்சயக்கப்பட்ட திருமணம் இது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது.

இது பள்ளியில் உள்ள அனைவருக்கும் தெரியும், பள்ளி நிர்வாகம் காதலிப்பதாக கூறி பணியிடை நீக்கம் செய்துள்ளது, ஆனால் இதுகுறித்து எங்கள் தரப்பு விளக்கத்தை தர நிர்வாகம் அனுமதிக்கவில்லை.

பள்ளி நிர்வாகத்தின் இந்த செயல் எங்களை களங்கப்படுத்துவதாக உள்ளது என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்