அண்ணியுடன் திருமணம்: 2 மணிநேரத்தில் தூக்கில் தொங்கிய 15 வயது சிறுவன்

Report Print Deepthi Deepthi in இந்தியா
2761Shares
2761Shares
ibctamil.com

பீகாரில் 15 வயது சிறுவனுக்கு தனது அண்ணியை திருமணம் செய்து வைத்த காரணத்தால் மனமுடைந்த அச்சிறுவன் தற்கொலை செய்துகொண்டான்.

Gaya மாவட்டத்தின் Paraiya கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் Mahadev Das(15) ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளான்.

இவரது மூத்த சகோதரர் சந்தோஷ தாஸ்க்கு, ரூபி தேவி என்ற பெண்மணியுடன் திருமணமாகி 2 குழந்தைகள் இருந்தனர்.

இந்நிலையில் சகோதரன் இறந்துவிட்டதால் அண்ணி ரூபி தேவி விதவையானார். அவருக்கு இரண்டு பிள்ளைகள் இருந்ததால் அவர்களை காப்பாற்றுவது ரூபிக்கு சுமையாக இருந்துள்ளது.

இதனால், மகாதேவிடம் விதவையாக இருக்கும் உனது அண்ணியை திருமணம் செய்துகொள் என பெற்றோர் மற்றும் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர், அதற்கு மகாதேவ் மறுத்துள்ளான்.

இருப்பினும் கட்டாயப்படுத்தி, அருகில் உள்ள ஒரு கோயிலில் வைத்து உறவினர்கள் மத்தியில் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த திருமணத்தால் மனமுடைந்த மகாதேவ், திருமணம் முடிந்த 2 மணிநேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டான்.

இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர்கள் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்