ஒரு குடும்ப புகைப்படம் கூட இல்லையே: தந்தையை இழந்த மகனின் கண்ணீர்

Report Print Kabilan in இந்தியா

நகைக்கடை கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்ற காவல் ஆய்வாளர் பெரியபாண்டி, கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரவாயல் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் பெரியபாண்டி, சென்னை குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

கடந்த நவம்பர் 16ஆம் திகதி கொளத்தூர் புதிய லட்சுமிபுரத்தில் முகேஷ் குமார் என்பவரின் நகைக்கடையில், கொள்ளை சம்பவம் நடந்தது.

கொள்ளையர்கள் ராஜஸ்தானில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைக்கவே, 6 பேர் கொண்ட தனிப்படை ராஜஸ்தானுக்கு விரைந்தது.

இன்று காலை பாலி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் பதுங்கியிருந்த கொள்ளையர்களுடன் நடந்த சண்டையில், காவல் ஆய்வாளர் பெரியபாண்டி சுட்டுக் கொல்லப்பட்டார்.

இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது, இதுகுறித்து பெரியபாண்டியின் மகன் ரூபன் கூறுகையில், எனது தந்தை பொலிஸ் வேலையில் மிகவும் ஈடுபாட்டுடன் இருந்தார். அவர் எங்களுடன் இணைந்து ஒரு குடும்ப புகைப்படம் கூட எடுத்துக்கொண்டதில்லை.

ஆனால், வீடு முழுக்க அவர் உயர் அதிகாரிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும், பரிசு வாங்கும் புகைப்படங்களும் மட்டுமே உள்ளது.

ஏதாவது நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என்றால் கூட, எங்களை அனுப்பி வைத்துவிட்டு அவரது பணியை முடித்த பிறகே தனியாக நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்