கொடூரன் தஷ்வந்த் மீது பெண்கள் செருப்பு வீசி தாக்குதல்

Report Print Arbin Arbin in இந்தியா

சென்னையில் 7 வயது சிறுமி மற்றும் பெற்ற தாயார் ஆகியோரை கொடூரமாக கொலை செய்த குற்றவாளி தஷ்வந்தை நீதிமன்ற வளாகத்தில் பெண்கள் செருப்பு வீசி தாக்கியுள்ளனர்.

சென்னை போரூரில் 7 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி எரித்து கொலை செய்த தஷ்வந்த் பிணையில் வெளிவந்த பின்னர் தனது வளர்ப்பு தாயாரை தலையில் அடித்து கொலை செய்தான்.

பின்னர் சென்னையில் இருந்து மும்பைக்கு தலைமறைவான அவனை பொலிசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் பொலிசாரால் ஆஜர்படுத்தப்பட்ட தஷ்வந்த் மீது நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருந்த பெண்கள் செருப்பை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக மும்பையில் இருந்து சென்னையில் அழைத்து வந்த போது, தஷ்வந்தின் உறவினர் ஒருவர் அவனை சரமாரியாக தாக்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்