பெண்ணின் வாக்குமூலத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த பொலிஸ்

Report Print Deepthi Deepthi in இந்தியா

கர்நாடக மாநிலத்தில் முன்னாள் கள்ளக்காதலன் தொல்லை கொடுத்த காரணத்தால் இன்னாள் கள்ளக்காதலனோடு சேர்ந்து தீர்த்துக்கட்டியதாக பெண் ஒருவர் அளித்துள்ள வாக்குமூலம் பொலிசாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

பொலிசார் விசாரணையில் வெளியான தகவல், நகைக்கடை வைத்திருக்கும் முரளி என்பவருக்கும், மம்தா என்பவருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணத்துக்கு முன்பே மம்தாவும், கிருஷ்ணாவும் நெருக்கமாகப் பழகி வந்துள்ளனர். திருமணம் ஆன பின்பும் இவர்களது கள்ளக்காதல் தொடர்ந்துள்ளது.

இதற்கிடையில், மம்தாவுக்கு செவத்தான் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது, கிருஷ்ணா அடிக்கடி மம்தாவை பார்க்க கிருஷ்ணகிரி வந்துள்ளார்.

இதுகுறித்து செவத்தான், மம்தாவிடம் கேட்டபோது, அவன், தனது முன்னாள் காதலன் என்றும், தொடர்ந்து என்னைத் தொல்லை கொடுத்து வருகிறான். அவனைத் தீர்த்து கட்டிவிட்டால் நாம் சந்தோஷமாக இருக்க முடியும் என கூறியுள்ளார்.

இதன்படியே, கிருஷ்ணாவை தனிமையில் சந்திக்க அழைத்த மம்தா, தனது காதலன் மற்றும் அவரது நண்பன் சக்திவேல் ஆகியோருடன் சேர்ந்து கொலை செய்துள்ளார்.

பொன்மலை கோயில் அடுத்துள்ள மறைவான பகுதியில் வைத்து செவத்தான், அவனது நண்பன் சக்திவேல் இருவரும், கத்தியைக் கொண்டு கிருஷ்ணாவின் தலையில் அடிக்கவும் மயங்கி விழுந்துள்ளார்.

பிறகு கிருஷ்ணாவின் கழுத்தை அறுத்துள்ளனர், இதில் கிருஷ்ணா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கொலை வழக்கில் மம்தா, செவத்தன், சக்திவேல் ஆகிய மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்