டிடிவி தினகரனுக்கு பொலிசார் வழங்கிய பிறந்தநாள் பரிசு

Report Print Gokulan Gokulan in இந்தியா

தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரனுக்கு எதிராக டெல்லி பொலிசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

இரட்டை இலை சின்னத்தை தங்கள் அணிக்கு பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கடந்த ஏப்ரல் மாதம் டிடிவி தினகரன் மீது டெல்லி பொலிசாரால் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் ஜாமீனில் வெளிவந்துள்ள தினகரன் தற்போது ஆர்.கே நகர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்து, தேர்தல் பரப்புரை பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் டெல்லி தீஸ் ஹிசாரி நீதிமன்றத்தில் தினகரனுக்கு எதிராக பொலிசார் துணைக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல்செய்துள்ளனர்.

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் டிடிவி.தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா, புல்கித் குந்த்ரா மற்றும் அஜய் விகரம் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

இன்று டிடிவி தினகரனின் பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று மாலை இந்த குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்