பெற்றோர் காதலித்ததால் பச்சிளம் குழந்தை விஷம் வைத்து கொலை

Report Print Deepthi Deepthi in இந்தியா

தர்மபுரி மாவட்டத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியினருக்கு பிறந்த பெண் குழந்தை கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அனுப்பிரியா என்ற பெண் முல்லைவேந்தன் என்பவரை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

இவர்களது திருமணத்தை முல்லைவேந்தனின் பெற்றோர் ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் அனுப்பிரியா தனது தாய் வீட்டிலேயே தனது கணவரோடு குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 45 நாட்களுக்கு முன்னர் அனுப்பிரியாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை பார்க்க வீட்டுக்கு வந்த முல்லைவேந்தனின் பெற்றோர், ஆசையாக இருக்கிறது குழந்தையை வீட்டுக்கு எடுத்துச்செல்கிறோம் எனக்கூறி குழந்தையை வீட்டுக்கு எடுத்துச்சென்றுள்ளனர்.

அதன்பின்னர் சிறிது நேரம் கழித்து குழந்தையை கொண்டு வந்து அனுப்பிரியாவிடம் கொடுத்துள்ளனர். வீட்டுக்கு வந்த சிறிது நேரத்திலேயே குழந்தைக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்ததில், குழந்தைக்கு விஷம் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது, சிறிது நேரத்திலேயே குழந்தையும் இறந்துபோனது.

தங்கள் காதல் திருமணத்தை ஏற்றுக்கொள்ளாமல் கணவரின் குடும்பத்தினர் தனது குழந்தையைக் கள்ளிப்பாலை கொடுத்துக் கொலை செய்துவிட்டதாக அனுப்பிரியா புகார் தெரிவித்ததையடுத்து, குழந்தை இறப்பு குறித்து பொன்னாகரம்காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்