காதலனை கணவனாக உருமாற்ற நடந்தது என்ன? காட்டிக்கொடுத்த மட்டன் சூப்

Report Print Deepthi Deepthi in இந்தியா

கணவரை எரித்து கொலை செய்ததோடு மட்டுமல்லாமல் தனது காதலனின் முகத்தை கணவரது முகமாக மாற்ற முயற்சித்த மனைவியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் இந்தியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவம் நடைபெற்ற பின்னணி வருமாறு

தெலுங்கானா மாநிலம் நாகர் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த சுதாகர் ரெட்டிக்கும்- சுவாதிக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர் சுதாகர் வியாபாரத்தில் கவனம் செலுத்தி வந்ததால், சுவாதி வெறுமையை உணர்ந்துள்ளார்.

இந்நிலையில் தான் பிசியோதெரப்பிஸ்ட் ராஜேஷ் என்பவருடன் சுவாதி காதலில் விழுந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

நாம் இருவரும் திருமணம் செய்துகொள்வோம், உன்னையும் உனது குழந்தைகளையும் நான் பார்த்துக்கொள்கிறேன் என ராஜேஷ், சுவாதியிடம் உறுதியளித்துள்ளார்.

ராஜேஷை திருமணம் செய்து கொள்ள தனது கணவர் சுதாகர் இடையூறாக இருப்பார் என்பதால் அவரை கொலை முடிவு செய்துள்ளார்.

நவம்பர் 26

கடந்த நவம்பர் 26-ம் தேதி தூக்கத்தில் இருந்த சுதாகர் படுக்கையில் இருந்து கீழே விழுந்தார். இதனால் அவரது தலையில் காயம் ஏற்பட்டது.

இதனை பயன்படுத்திக்கொண்ட சுவாதி, தனது காதலன் ராஜேஷை வீட்டுக்கு வரவழைத்துள்ளார். சுவாதியின் வீட்டுக்கு வந்த ராஜேஷ், சுதாகருக்கு மயக்க மருந்து கொடுத்துள்ளார்.

சுவாதியும், ராஜேஷும் இணைந்து சுதாகரை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்றுள்ளனர். அதன் பிறகு, சுதாகரின் உடலை காரில் எடுத்துசென்று காட்டில் எரித்துள்ளனர்.

காதலனை கணவராக்க திட்டம்

காதலன் ராஜேஷை, தனது குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் கணவன் சுதாகராக காட்ட சுவாதி திட்டமிட்டார். இதனை நிறைவேற்ற, பெட்ரோல் ஊற்றி முகத்தை எரித்துக்கொள்ளுமாறு காதலன் ராஜேஷை கேட்டுள்ளார்.

அதன்படியே ராஜேஷ் செய்துள்ளார். அதன்பிறகு காதலன் ராஜேஷ்க்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து, தனது கணவரின் முகம் இப்படி மாறிவிட்டது என்று தனது குடும்பத்தினரிடம் கூற முடிவு செய்துள்ளார்.

உடனே ராஜேஷை மருத்துவமனையில் அனுமதித்த சுவாதி, தனது கணவர் சுதாகர் மீது அமில வீச்சு நடந்தது என்று பின்னர் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இதற்காக சுதாகரின் குடும்பத்தார் ரூ.5 லட்சம் பண உதவி செய்துள்ளனர்.

காட்டிக்கொடுத்த மட்டன் சூப்

மருத்துவமனையில் இருந்த சுதாகரின் நடவடிக்கையில் அவரது குடும்பத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சுதாகர் அசைவ உணவுகளை நன்றாக விரும்பி சாப்பிடுவார்.

மருத்துவமனையில் ராஜேஷ்க்கு மட்டன் சூப் கொடுத்த போது, அவர் நான் சைவம் என்றும் மட்டன் சூப் சாப்பிட மாட்டேன் எனக்கூறி அதனை நிராகரித்துள்ளார்.

உடனே ராஜேஷை மருத்துவமனையில் அனுமதித்த சுவாதி, தனது கணவர் சுதாகர் மீது அமில வீச்சு நடந்தது என்று பின்னர் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்.

ராஜேஷின் விரல் ரேகைகளை பொலிசார் சோதித்த போது, அது சுவாதியின் கணவர் சுதாகரின் விரல் ரேகையுடன் பொருந்தவில்லை என்பதை கண்டுபிடித்தனர்.

இதுவே உண்மையை வெளிக்கொண்டுவந்தது, சுவாதியும் ராஜேஷும் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

போலீஸார் சுவாதியை கைது செய்துள்ளனர், ராஜேஷ் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்