காதலை கண்டுகொள்ளாத பெண்: இளைஞர் செய்த விபரீத செயல்

Report Print Raju Raju in இந்தியா

காதலிக்க மறுத்த பெண்ணையும் அவரது தாயையும் கத்தியால் குத்திவிட்டு இளைஞர் ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.

அங்குள்ள பத்தப்பட்டினத்தைச் சேர்ந்த கிருஷ்ணா என்ற இளைஞர் பிரம்மரம்பிகா என்ற பெண்ணை ஒருதலையாகக் காதலித்து வந்தார்.

கிருஷ்ணாவின் காதலை பிரம்மரம்பிகா கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரமைடைந்த அவர் பிரம்மரம்பிகா வீட்டுக்கு சென்று அவரை சரமாரியாகக் கத்தியால் குத்தியுள்ளார்.

தடுக்க வந்த பிரம்மரம்பிகாவின் தாயும் கிருஷ்ணாவின் தாக்குதலுக்கு ஆளானார்.

பின்னரும் ஆத்திரம் அடங்காத கிருஷ்ணா தன்னைத் தானே கத்தியால் குத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பொலிசார் தாயையும், மகளையும் மீட்டு மருத்துவமனையில் சேர்க்க அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்