ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்.. மற்றொரு கேலிக் கூத்து: முன் மொழிந்தவர் வீடியோவை வெளியிட்ட விஷால்

Report Print Santhan in இந்தியா
284Shares

தமிழகத்தில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் தன்னை வேட்புமனுவில் முன்மொழிந்தவர் பேசிய வீடியோவை விஷால் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பிரபல திரைப்பட நடிகரான விஷால் யாரும் எதிர்பார்க்காத போது, திடீரென்று சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார்.

அதன் பின் அதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார், வேட்பு மனுவை பரீசிலனை செய்த தேர்தல் அதிகாரிகள் விஷாலின் வேட்புமனுவில் முன்மொழிந்துள்ளவர்கள் 10 பேரில் தீபன், சுமதி என்று இருவரின் கையெழுத்து போலியானது என கூறி அவரது வேட்பு மனுவை நிராகரித்தனர்.

இதனால் விஷாலின் ஆதரவாளர்கள் அங்கு போராட்டம் நடத்தினர். இதையடுத்து விஷால் தேர்தல் அதிகாரியிடம் முறையிட்ட பின்னர் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அது அறிவித்து சில மணி நேரங்களிலே மீண்டும் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.

வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால், விஷால் ராஜேஸ் லாக்கானிடம் நேரில் சென்று முறையிட்டார்.

பின்னர் வேட்புமனுவில் விஷாலை முன்மொழிந்ததால் மிரட்டப்பட்டதாக கூறப்படும் தீபன் மற்றும் சுமதி ஆகியோர் தேர்தல் அலுவலர் வேலுச்சாமி முன் விளக்கமளித்த வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டது.

அதில் வேட்புமனுவில் விஷாலை முன்மொழிந்து தாங்கள் கையொப்பமிடவில்லை என்றும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இந்த வீடியோவின் ஒரு பகுதியை மட்டும் குறிப்பிட்டு விஷால் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தன்னை முன்மொழிந்த தீபன், நான் போட்ட கையெழுத்து என்னுடையது இல்லை என்று கூறுகிறார்.

அதில் அவர் நான் போட்ட கையெழுத்து என்று ஒப்புக் கொண்டு பின் இல்லை என மறுப்பதாக வார்த்தை பதிவாகியுள்ளது. அதை மேற்கோள் காட்டிவிட்டு இது மற்றொரு ஜனநாயக கேலிகூத்தை வெளிப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்