இந்தியாவை உலுக்கிய 17 இளம்பெண்கள், குழந்தைகள் கொலை வழக்கு: குற்றவாளிகளுக்கு மரணதண்டனை

Report Print Deepthi Deepthi in இந்தியா
312Shares

டெல்லியை அடுத்துள்ள நொய்டாவிலுள்ள நிதாரி கிராமத்தில் இளம்பெண்கள் மற்றும் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2006 ஆம் ஆண்டில் டெல்லியை அடுத்துள்ள நொய்டாவிலுள்ள நிதாரி கிராமத்தில் இளம்பெண்கள் மற்றும் குழந்தைகள் திடீர், திடீரென காணாமல் போயினர்.

சுமார் 17 இளம்பெண்கள் மற்றும் குழந்தைகளை மணீந்தர் சிங் (52) என்ற நபரும், இவரிடம் வேலை பார்த்த ரேந்தர் கோலி என்பவரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வீட்டிற்குள் புதைத்து வைத்துள்ளனர்.

இருவரும் சேர்ந்து 17 இளம்பெண் மற்றும் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து வெட்டிக் கொன்று சாக்கடையில் வீசியதாக 16 வழக்குகள் பதிவானது.

9 வழக்குகளில் மணிந்தர் சிங் பந்தர் மூன்று வழக்குகளில் குற்றவாளி என்றும், சுரிந்தர் கோலி அனைத்து வழக்கிலுமே குற்றவாளி என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அனைத்து வழக்கிலும் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்