மும்பையில் தப்பி ஓடிய கொலையாளி தஷ்வந்த் மீண்டும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.
சென்னையை சேர்ந்த சிறுமி ஹாசினி கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியில் வந்த தஷ்வந்த் (24) பெற்ற தாயையும் கொலை செய்துவிட்டு மும்பையில் தலைமறைவாக இருந்தான்.
இதையடுத்து தமிழக பொலிசார் தஷ்வந்தை மும்பையில் கைது செய்த நிலையில் பொலிஸ் பிடியிலிருந்து அவன் நேற்று தப்பியோடிவிட்டான்.
இந்நிலையில் மும்பையில் அந்தேரி உணவகம் ஒன்றில் பதுங்கி இருந்த தஷ்வந்தை மும்பை பொலிசார் உதவியுடன் தமிழக பொலிசார் தற்போது கைது செய்ததுள்ளனர்.