வேட்புமனுவில் கணவர் பெயரை தவறாக குறிப்பிட்ட ஜெ.தீபா: குழப்பத்தில் தீபா பேரவை

Report Print Arbin Arbin in இந்தியா
92Shares

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த ஜெ.தீபா தமது கணவர் பெயரை தவறாக குறிப்பிட்டது தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு எதிர்வரும் 21 ஆம் திகதி தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கலின் போது தீபா பேரவை சார்பில் போட்டியிட மனு தாக்கல் செய்த தீபா குறிப்பிட்ட ஆவணம் ஒன்றில் தமது கணவர் மாதவன் பெயரை தவறாக குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் அதை அழித்து மீண்டும் மாதவன பெயரை அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆவணம் தற்போது சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. முன்னதாக ஜெ.தீபா தாக்கல் செய்த மனுவில் சொத்து மற்றும் வழக்குகள் தொடர்பாக எவ்வித தகவலும் பதிவு செய்யாததை அடுத்து அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்