பொலிசாருக்கு உதவிய பெண்: நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக நடத்திய கும்பல்

Report Print Arbin Arbin in இந்தியா
313Shares

இந்திய தலைநகர் டெல்லியில் சட்டவிரோத மது கும்[பல் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் அளித்த பெண்மணியை குறித்த குமபல் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் நரேலா பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நீண்ட காலமாக கொடிகட்டிபறந்து வந்துள்ளது.

இதைக்கட்டுப்படுத்த பொலிசார் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் வீணான நிலையில், அப்பகுதியில் உள்ள பொதுமக்களை தகவல் அளிக்கும்படி பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த பகுதியில் உள்ள பெண்மணி ஒருவர் துணிச்சலுடன் போதிய தகவலை திரட்டி பொலிசாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து பொலிசார் தொடர்புடைய பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்தனர். இதில் ஆத்திரம் அடைந்த கும்பலானது பொலிசாருக்கு தகவல் அளித்ததாக அப்பகுதியில் உள்ள பெயர் வெளிப்படுத்தாத அப்பெண்ணை கொடூரமாக தாக்கியுள்ளனர்.

மட்டுமின்றி 25-கும் மேற்பட்ட பெண்கள் சேர்ந்து அப்பெண்மணியை ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக நடத்தியுள்ளனர்.

இத்தகவல் அறியவந்த மகளிர் ஆணையம் உடனடியாக அப்பகுதிக்கு சென்று அப்பெண்மணியை மீட்டுள்ளது. மேலும் பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு சந்தேகத்துக்குரிய நபர்கள் மீது வழக்கு பதிந்துள்ளனர்.

நரேலா பகுதியில் முன்னிரவு நடந்த அதிரடி சோதனையில் ஒரு குடியிருப்பில் இருந்து மட்டும் 300 மது போத்தல்களை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த குடியிருப்பானது பொலிஸ் நிலையத்தில் இருந்து சில மீற்றர் தொலைவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்