கசிந்தது சாமியாரின் வீடியோ

Report Print Deepthi Deepthi in இந்தியா
350Shares

கர்நாடாகாவில் சாமியார் ஒருவர் பெண்ணுடன் ஹொட்டல் அறையில் இருக்கும் வீடியோ வெளியாதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Shri Guru Kottureshwara கோயிலை சேர்ந்த சாமியார், ஹொட்டல் அறையில் இளம் பெண் ஒருவடன் இருக்கும் வீடியோ வெளியானது.

இந்த வீடியோ வெளியானதையடுத்து, இவர் கோவில் நிர்வாகத்தில் இருந்து வெளியேறவேண்டும் என்று அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து இதுகுறித்து பொலிசார் விசாரிக்க முயன்றபோது, சாமியார் தனது கைப்பேசியை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார்.

அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என போராட்டக்காரர்களிடம் தெரிவித்து, அவர்களை கலைந்து செல்ல பொலிசார் உத்தரவிட்டனர்.

இதற்கு முன்னர் கர்நாடாகவில் தயானந்த சுவாமியின் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்