இந்தியாவில் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, அதே பாணியில் ஐந்து வயது சிறுமியை கொலை செய்த 16 வயது சிறுவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் தனது உறவினரின் வீட்டில் தங்கியபடி 11-ஆம் வகுப்பு படித்து வந்தான்.
இந்நிலையில், திரைப்படத்தைப் பார்த்து விரைவில் அதிக பணம் சம்பாதிக்க திட்டமிட்டு வீட்டு உரிமையாளரின் 5 வயது மகளை கடத்திய சிறுவன் அவர் பெற்றோரிடம் போன் செய்து 20 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளான்
பின்னர் சிறுமி கூச்சலிட்டால் மாட்டி கொள்வோம் என பயந்த சிறுவன் அவரை நீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்து உடலை மறைத்து வைத்துள்ளான்
இதையடுத்து சிறுவன் பேசிய போன் நம்பரை வைத்து பொலிசார் சிறுவனை பின் தொடர்ந்து பிடித்துள்ளனர்.
முதலில் எதுவும் தெரியாதது போல சிறுவன் நடித்த நிலையில் பொலிஸ் விசாரணையில் அனைத்து உண்மைகளையும் கூறியுள்ளான்.
இதையடுத்து பொலிசார் அவனை கைது செய்துள்ளனர்.