கூலித் தொழிலாளியை உயிருடன் எரித்து கொலைசெய்த கொடூரன்: வைரல் வீடியோ

Report Print Gokulan Gokulan in இந்தியா
245Shares

இந்தியாவின் ராஜஸ்தானில் முஸ்லிம் இளைஞர் உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்க மாநிலத்திலிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு ஒப்பந்த தொழிலில் கூலி வேலை செய்வதற்காக வந்திருந்தவர் முகமது அப்ரசுல்(48).

வேலை இருப்பதாக கூறி உள்ளூர்காரரான சம்புலால் ரேகர் என்பவர் அழைத்ததையடுத்து வந்த அப்ரசுல் சரமாரியாக தாக்கப்பட்டுள்ளார்.

பின்னர் கோடாரியால் வெட்டப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் இருந்த அப்ரசுலை உயிருடன் எரித்து கொன்றுள்ளார் சம்புலால்.

இந்த சம்பவம் அனைத்தையும் சம்புலாலின் நண்பர் வீடியோவாக பதிவு செய்து கொண்டிருக்க இறுதியில் அருகில் வந்த கொலையாளி சம்புலால் ‘லவ் ஜிகாத்’ என்ற வார்த்தையை குறிப்பிட்டுள்ளார்.

’லவ் ஜிகாத்’ என்றால் முஸ்லிம் இளைஞர்கள் காதல் என்ற ஆயுதத்தை பயன்படுத்தி முஸ்லிம் அல்லாத மதத்தை சேர்ந்த பெண்களை மதமாற்றம் செய்யக்கூடிய முயற்சியில் ஈடுபடுவதாகும்.

கொலையாளி இப்படி கூறியுள்ளதால் அவரின் தங்கைக்கும் அப்ரசுல்லுக்கும் தொடர்பு இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார், பாதி எறிந்த நிலையில் கிடந்த அப்ரசுல்லின் உடலை கைப்பற்றியுள்ளனர்.

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தலைமறைவாக உள்ள கொலையாளி சம்புலால் ரேகரை பொலிசார் தேடிவருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்