மூக்குத்தியால் விடப்பட்ட சாபம்...400 ஆண்டுகள் தொடர்ந்த சோகம்: ஆண் வாரிசால் முடிவடைந்த சாபம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

மைசூரு மன்னர் குடும்பத்தின் மீதான 400 ஆண்டுகால, சாபம முடிவுக்கு வந்துள்ளது. தற்போதைய மன்னர் யாதுவீர் கிருஷ்ணதத்தா சாமராஜ வாடியாருக்கு ஆண் வாரிசு பிறந்துள்ளது..

அதென்ன சாபம்?

சாபத்திற்க்கு வயதிருக்கிறதா...?

சக்தி இருக்கிறதா…?

அன்று நடந்த சரித்திர சம்பவத்தை நினைவு கூர்ந்தால் பல கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும்.

விஜயனகர பேரரசின் ஆட்சிக்கு கீழ் இருந்த மைசூரு பகுதியை பேரரசின் பிரதிநிதியாக இருந்த திருமலை ராஜா ஆண்டு வந்தார்.தங்களது ராஜ்ஜியத்தை மீட்க முதலாம் ராஜ உடையார் 1610-ஆம் ஆண்டு ஸ்ரீரங்கப்பட்டணத்தின் மீது போர் தொடுத்தார்.இதனால்,திருமலைராஜா தனது மனைவிகளுடன் காவிரி நதிக்கரையில் அமைந்திருந்த “தலக்காடு” நகருக்குக் குடி பெயர்ந்தார்.குடி பெயர்ந்த சில மாதங்களில்,திருமலைராஜ நோய்வாய்ப்பட்டு மரணமடைந்தார்.

திருமலை ராஜாவின் இரண்டாவது மனைவி அலமேலம்மா மிக அழகானவர், அத்துடன் ஏராளமான நகைகளும் அவரிடமிருந்தது. அலமேலம்மாவிடம் மிக அழகான மூக்குத்தி ஒன்று இருந்தது. அதில் மிகப்பெரிய முத்து பதிக்கப்பட்டிருந்ததால் அந்த மூக்குத்தி பற்றி ஸ்ரீரங்கபட்டண மக்கள் அதிசயித்து பேசிக்கொள்வார்களாம்.

கணவன் இறந்துவிட்டதினால் அலமேலம்மா நகைகளை அணிவதில்லை. அலமேலம்மா ஸ்ரீரங்கநாயகியின் பரம பக்தை.

அந்த மூக்குத்தி இதர நகைகளை ஸ்ரீ ரங்கநாயகி கோயிலுக்கு அலமேலம்மா அன்பளிப்பு செய்துவிட்டார். ஒவ்வொரு வாரமும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளை அலமேலம்மா நகைககள் மூக்குத்தி ஸ்ரீரங்க நாயகிக்கு அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும்.

மற்ற தினங்களில் நகைகள் மற்றும் மூக்குத்தி அலமேலம்மாவிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்படும், ஸ்ரீரங்க நாயகி கோயிலைச் சேர்ந்த புரோகிதர்கள் நகைகளை பாதுகாக்கும் பொறுப்பினை புரோகிதர்களுக்கு தர வேண்டும் என்று உடையார் மன்னரிடம் கேட்டுக்கொண்டனர். உடையாரும் தன் வீரர்களை அனுப்பி அலமேலம்மாவிடம் நகைகளை பெற்றுவருமாறு கட்டையிட்டுள்ளார்.

அலமேலம்மா மூக்குத்தியை மட்டும் கொத்தனுப்ப எல்லா நகைகளையும் வாங்கி வாருஙகள்....தர மறுத்தால் நகைகளை வலுக்கட்டாயமாகப் பறித்து வாருங்கள் என்று மீண்டும் கட்டளையிட்டார். கோபமுற்ற அலமேலம்மா நகைகளுடன் ஒரு பாறையின் உச்சிக்கு ஓடிச்சென்று " இந்த தலக்காடு பாலைவனமாகட்டும்....மௌங்கி நீர்ச் சுழிகளால் சிதைந்து போகட்டும்....உடையார் வம்சம் வாரிசு இல்லாமல் போகட்டும் என்று சாபம் கொடுத்தவாறே பாறையின் உச்சியிலிருந்து கீழே பாய்ந்து கொண்டிருக்கும் காவிரி நதியில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

இதை அறிந்த உடையார் அதிர்ச்சி அடைந்து அலமேலம்மா போன்ற சிலை செய்து ராஜ குடும்பம் வணங்க தொடங்கியது. அலமேலம்மா சாபத்தின் காரணமாகவோ, என்னவோ உடையார் வம்ச வாரிசுகள் சின்ன வயதில் காலமானார்கள். வேறு வாரிசும் பிறக்கவில்லை, மைசூர் அரசராக அரச குடும்பம் தத்து எடுத்து வாரிசுகளை வளர்த்து வந்தனர்.

400 ஆண்டுகால சாபம் தீர்ந்தது

நாடு சுதந்திரம் பெற்ற போது மைசூர் மாகாண மன்னராக இருந்தவர் ஜெயசாமராஜேந்திர உடையார். வாரிசு இல்லாததால் அவர் கண்டதத்த நரசிம்ம உடையாரை தனது மகனாக தத்தெடுத்தார். அவர், 1974ம் ஆண்டு மன்னராக முடி சூட்டப்பட்டார். கந்ததத்தா நரசிம்மராஜ உடையார் கடந்த, 2013ம் ஆண்டு காலமானார்.

அவருக்கு நேரடி ஆண் வாரிசு இல்லை. எனவே, அவரது மூத்த சகோதரி காயத்ரி தேவியின் பேரன் யதுவீர கோபாலராஜே அர்ஸ் (23) என்பவர் அடுத்த வாரிசாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மைசூரின், 27 வது மன்னராக முடிசூட்டப்பட்ட அவருக்கு யதுவீர கிருஷ்ணதத்தா சாம்ராஜ உடையார் என புதிய பெயர் சூட்டப்பட்டது.

அவருக்கும் ராஜ்காட் மன்னர் குடும்பத்தை சேர்ந்த திரிஷாதேவி என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜூன், 27 ம்தேதி திருமணம் நடந்தது.

பெங்களூருவில் உள்ள கிளவுட்நைன் மருத்துவமனையில், திரிஷா தேவிக்கு நேற்று இரவு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதன் மூலம், மன்னர் குடும்பத்தின் மீதான 400 ஆண்டுகால சாபம் முடிவுக்கு வந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...