கொடூரன் தஷ்வந்த் இருப்பிடம் குறித்து பொலிசுக்கு கிடைத்த தகவல்

Report Print Raju Raju in இந்தியா

சிறுமி ஹாசினியை எரித்து கொன்றுவிட்டு பெற்ற தாயையும் கொன்ற தஷ்வந்த் கொல்கத்தாவுக்கு தப்பி சென்றிருக்கலாம் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள குன்றத்தூரை சேர்ந்த சிறுமி ஹாசினியை பலாத்காரம் செய்து எரித்து கொன்ற வழங்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த் (24) பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டான்.

வெளியில் வந்த அவனுக்காக பெர்றோர் இருப்பிடத்தை மாற்றி வேறு வீட்டுக்கு குடிபெயர்ந்தனர்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை தனது தாயை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துவிட்டு நகைகளை எடுத்து கொண்டு தஷ்வந்த் தப்பியோடிவிட்டான்.

இதையடுத்து பொலிசார் தஷ்வந்தின் செல்போன் நம்பரை ஆராய்ந்த போது அவனுடன் சிறையில் இருந்தவர்களிடம் அதிகம் பேசியது தெரியவந்தது.

தஷ்வந்த் தப்பி சென்ற இருசக்கர வாகனத்தின் பதிவு எண்களை கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், அவன் கொல்கத்தாவுக்கு தப்பி சென்றிருக்கலாம் என பொலிசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்