18 ஆண்டுகள் கொத்தடிமை வாழ்க்கை: வாலிபரின் உருக்கமான கடிதம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

விழுப்புரம் மாவட்டத்தில் விடுதி ஒன்றில் தங்கி வசித்து வந்த அருண்குமார் என்ற வாலிபர் மின்விசிறியில் சேலையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த விடுதி ஊழியர்கள், உடனே இதுபற்றி விழுப்புரம் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து அங்கு வந்த பொலிசார் அவரை அறையை சோதனை செய்ததில், அருண்குமார் எழுதிய உருக்கமான கடிதமும் பொலிசாரிடம் சிக்கியது, கந்துவட்டி கும்பலின் முகத்திரையை கிழிக்க வேண்டும் என்று போராடினேன்.

ஆனால் என்னால் முடியவில்லை. திருச்சியை சேர்ந்த தொழில் அதிபர் அலெக்ஸ் ராஜா (இவர் நடிகர் அலெக்ஸின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.) என்பவரிடம், நானும், எனது சகோதரரும் சிறுவயதிலேயே வேலைக்கு சேர்ந்தோம்.

18 ஆண்டுகள் எங்களை அவர் கந்துவட்டி வசூலில் கொத்தடிமைகளாக வைத்திருந்தார். அவர் பொன்மலை ரெயில்வே ஊழியர்கள், பொதுமக்கள் என பலரிடம் இருந்து சொத்து ஆவணங்களை வாங்கி வைத்துக்கொண்டு கந்துவட்டியில் கடன் வழங்கி வந்தார்.

சமீபகாலமாக கந்துவட்டி பிரச்சினை பெரும் பிரச்சினையாக இருந்தது. அப்போதுதான் அப்பாவி மக்களை ஏமாற்றி கந்துவட்டி செய்த கும்பலுக்கு முடிவுகட்ட நினைத்தேன். ஒரு வருடமாக ஆதாரங்களை திரட்டியும் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

நானும் அவரிடம் கடன் வாங்கியிருந்தேன். அதை வட்டிபோட்டு பணம் கேட்டார். கந்துவட்டி கொடுமையால் நான் மிகுந்த மன உளைச்சலில் இருந்தேன். எனவே கந்துவட்டி கும்பலை உடனே கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு அந்த தனிப்படை பொலிசார், அருண்குமாரின் சொந்த ஊரான திருச்சிக்கு விரைந்து சென்று அருண்குமாரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.

மேலும் அருண்குமார் கடிதத்தில் குறிப்பிட்டு அலெக்ஸ் ராஜாவையும் பொலிசார் தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers