ஆர்.கே நகர் தேர்தல் அதிகாரியிடம் அழாத குறையாக கெஞ்சிய விஷால் : வைரலாகும் வீடியோ

Report Print Raju Raju in இந்தியா

நடிகர் விஷாலின் வேட்புமனு ஆர்.கே நகர் தேர்தல் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் அதிகாரியிடம் கெஞ்சிய வீடியோ வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள ஆர்.கே நகர் தொகுதிக்கு வரும் 21-ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இதில் சுயேட்சியாக போட்டியிட நடிகர் விஷால் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.

ஆரம்பத்தில் நடிகர் விஷால் மனுமீதான பரிசீலனையில் இழுபறி நீடித்தது. பின்னர் மனுவில் பெயர்கள் போலியாக குறிப்பிடப்பட்டு, கையெழுத்து போடப்பட்டு உள்ளதாக கூறி தேர்தல் அதிகாரி வேலுச்சாமி மனுவை நிராகரித்தார்.

இதன் பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் தனது மனு ஏற்று கொள்ளப்பட்டு விட்டதாக விஷால் டுவிட்டரில் அறிவித்தார்.

ஆனால் நேற்றிரவு 11 மணிக்கு விஷால் மனு நிராகரிக்கப்பட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.

இதையடுத்து அதிகாரியிடம் விஷால் இது குறித்து கெஞ்சி பேசினார். அப்போது, நிங்கள் மனசாட்சியின் படி படிவத்தை எழுதியது பெருமையாக இருந்தது.

ஆனால் எல்லா வேட்பாளர்களுக்கும் நீங்கள் முடிவெடுக்கும் போது என்னை பற்றி மட்டும் ஏன் வெளியில் சென்று யாரிடமோ போனில் பேசினீர்கள் என கேட்டார்.

மக்களுக்கு நல்லது செய்ய தேர்தலில் நிற்கிறேன், அது தவிர வேறு நோக்கம் கிடையாது என கெஞ்சி கேட்பதாக கூறினார்.

அருகிலிருந்த விஷால் ஆதரவாளர்கள், தேர்தல் அதிகாரிகள் காலில் கூட விழ தயார் என கூறினார்.

இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்