அபிஷேக் பச்சனின் குழந்தையை ட்விட்டரில் கிண்டல் அடித்த பெண்: பக்குவமாக பதிலளித்த அபிஷேக்

Report Print Gokulan Gokulan in இந்தியா

பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனின் குழந்தையை ட்விட்டரில் கிண்டலடித்த பெண்ணிடம் பக்குவமாக பதிலளித்துள்ள அபிஷேக் பச்சனை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

முன்னாள் உலக அழகி ஐஷ்வர்யா ராய்- அபிஷேக் பச்சனின் மகளான ஆராத்யாவை குறிப்பிட்டு, ’உங்கள் குழந்தை பள்ளிக்கு செல்கிறாளா? பள்ளிக்கூடம் எப்படி உங்கள் குழந்தைக்கு எப்போதும் அவரது தாயாரோடு சுற்றுலா செல்ல அனுமதிக்கிறது என்று ஆச்சரியமாக உள்ளது.

இல்லை அறிவில்லாமல் வெறும் அழகோடு உங்கள் மகள் இருக்க விரும்புகிறீர்களா.. எப்போது ஒரு கர்வம் பிடித்த அம்மாவின் கைக்குள்ளே இருக்கிறார் உங்கள் மகள். அவளுக்கு சராசரியான குழந்தைப் பருவம் கிடைக்கவில்லை'' என்று ஷேரின் பட்டேயன் என்னும் பெண் பதிவிட்டிருந்தார்.

பொதுவாக உச்ச நடிகர்கள் இதுபோன்ற ட்வீட்களுக்கு பெரிதாக ரியாக்ட் செய்ய மாட்டார்கள். ஆனால் இந்த ட்வீட்டை கவனித்த அபிஷேக் மிகவும் பக்குவமாக பதிலளித்துள்ளார்.

அதில், ''மேம்... எனக்குத் தெரிந்தவரை பெரும்பாலான பள்ளிகள் வார இறுதியில் மூடிதான் இருக்கும். எனது மகள் எப்போதும் பள்ளி நாட்களில் பள்ளிக்கூடத்துக்குச் செல்கிறாள். நீங்கள் உங்கள் ட்விட்டீல் உள்ள எழுத்துப் பிழைகளைத் திருத்திக் கொள்ளுங்கள்”என பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...