விஷாலை பார்க்க பரிதாபமாக உள்ளது: சேரனின் பதிலடி

Report Print Deepthi Deepthi in இந்தியா

நடிகர் விஷால் விடுத்துள்ள எரிச்சரிக்கை கடிதத்திற்கு நான் ஒருபோதும் பதிலளிக்கப்போவதில்லை என இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக நடிகர் விஷால் அறிவித்தைதையடுத்து, இயக்குநர் சேரன் அதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

தயாரிப்பாளர் சங்க தலைவராக இருக்கும் அவர், அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் நிற்கலாம் எனக்கூறி தயாரிப்பாளர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில், ஆர்கே நகரில் நடிகர் விஷால் தாக்கல்செய்யப்பட்ட வேட்புமனுவில், அவரை முன்மொழியாதவர்களின் இரண்டு பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறி அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதால் தங்களது போராட்டத்தை இதோடு நிறுத்திகொள்வதாக இயக்குநர் சேரன் பத்திரிகையார்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் அவர்க கூறியதாவது, நான் விளம்பரம் தேடிக்கொள்வதற்காக இவ்வாறு செய்கிறேன் என்றும் என்மீது நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் விஷால் எச்சரிக்கை பாணியில் எனக்கு கடிதம் அனுப்பினார்.

ஆனால், அதற்கு நான் ஒருபோதும் பதிலளிக்கப்போவதில்லை. விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதற்கு அவரது போதிய அனுபவமின்மை தான் காரணம் என கூறியுள்ளார். மேலும் அவரை பார்க்க பரிதாபமாக இருக்கிறது என்றும் மீண்டும் ஒருமுறை விஷாலுக்கு வாய்ப்பு கிடைக்க வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...