ஜெயலலிதாவின் மகள் என்று கூறும் அம்ருதாவை தூண்டிவிட்டது யார் தெரியுமா? வெளியான பகீர் தகவல்

Report Print Arbin Arbin in இந்தியா

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகள் என்று கூறும் அம்ருதாவை தூண்டிவிட்டது சசிகலாவா என்பது தொடர்பான பரபரப்பு தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

ஜெயலலிதாவின் மகள் என்று பெங்களூருவை சேர்ந்த பெண் அம்ருதா கூறி வருகிறார். இந்த விவகாரம் தொடர்பில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய அம்ருதா தயாராகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ரஞ்சனி தான் அம்ருதாவை அழைத்து வந்து ஜெயலலிதாவின் மகள் என்று தன்னிடம் கூறியதாக லலிதா கூறி இருந்தார்.

மட்டுமின்றி அம்ருதாவின் மனுவில் கையெழுத்திட்ட ரஞ்சனி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

அம்ருதா மூலம் ஜெயலலிதாவின் குடும்ப ரகசியங்களை வெளிப்படுத்தும் நடவடிக்கைக்கு அம்ருதாவை பயன்படுத்த ரஞ்சனியிடம் சசிகலா ஆலோசனை வழங்கி இருக்கிறார்.

அந்த ஆலோசனைப்படி தற்போது அம்ருதா செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அம்ருதாவை இயக்குவதால் சசிகலாவுக்கு என்ன லாபம் என்று பலர் கேட்கிறார்கள். ஏற்கனவே அ.தி.மு.க. கையை விட்டு போய்விட்டது. சொத்துக்களுக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், மகள் தீபா ஆகியோர் உரிமை கொண்டாடி வருகிறார்கள்.

ஜெயலலிதாவின் நேரடி வாரிசு வந்துவிட்டால் கட்சியையும் சொத்துக்களையும் மீட்டெடுத்து விடலாம் என்று சசிகலா நினைப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அம்ருதா தன்னை மீறி எதுவும் செய்யமாட்டார் என்றும் அவர் வெளியே வருவது நல்லதுதான் என்றும் சசிகலா நினைக்கிறார்.

ஜெயலலிதாவின் வாரிசு அம்ருதா என்று சொன்னால் கட்சிக்குள்ளும் குழப்பம் வராது, சொத்துக்கு சொந்தம் கொண்டாடி வரும் தீபக் மற்றும் தீபாவும் அமைதியாகிவிடுவார்கள் என்றும் சசிகலா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது அ.தி.மு.க. நிர்வாகிகளும், தீபா - தீபக்கும் சசிகலாவுக்கு எதிராக கருத்துக்களை கூறி வருவதால் அவர்களுக்கு செக் வைக்கும் எண்ணத்துடன் அம்ருதாவை களத்தில் இறக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஞ்சனி என்பவர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தாயார் சந்தியாவுக்கு உறவினர். மேலும் ஜெயலலிதாவின் உறவினரான லலிதா கூறும் போது ஜெயலலிதாவுக்கு 1980-ம் ஆண்டு பிரசவம் பார்த்தபோது ரஞ்சனி உடன் இருந்தார் என்றும் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...