இந்திய அளவில் வைரலான பொலிஸ் வீடியோ

Report Print Gokulan Gokulan in இந்தியா
122Shares
122Shares
lankasrimarket.com

இந்தியாவின் மத்தியபிரதேச மாநில காவல் அதிகாரி ஒருவர் காவல் நிலையத்துக்குள் வைத்தே குத்தாட்டம் போட்ட வீடியோ இந்திய அளவில் வைரலாகியுள்ளது.

மத்தியபிரதேசத்தின் ஹிராபூர் பகுதியில் உள்ள காவல்துறை அலுவலகத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர், பாலிவுட்டின் துள்ளல் பாடல் ஒன்றுக்கு கவலை மறந்து குத்தாட்டம் ஆடுவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.

மற்றொரு காவலர் எடுத்த அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு ஆதரவாக இந்தியா முழுவதும் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

’24 மணி நேரமும் மக்கள் பணியாற்றும் காவலர்கள் அவ்வப்போது இவ்வாறு ஓய்வெடுப்பதில் தவறு ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை, இதுபோன்ற நடனங்கள் இளைப்பாறுதல் போன்றதாகும்’ என பலரும் ஆறுதலாக குரல் எழுப்பி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்