ஜெயா நினைவிடத்தில் பழனிசாமி- பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை

Report Print Samaran Samaran in இந்தியா

தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா இன் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுட்டிக்கப்படுகின்றது. இதையொட்டி முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது. சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையிலிருந்து சேப்பாக்கம் வழியாக மெரினா வரை பேரணி நடை பெற்றது. பேரணியில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர்.

பேரணி முடிவில் ஜெயலலிதா நினைவிடத்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். பின்னர் எம்ஜிஆர் நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தினர்.

தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா கடந்த வருடம் செப்டம்பரில் உடல் நல குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், சிகிச்சை லனின்றி டிசம்பர் 5ந்தேதி அவர் மரணமடைந்து விட்டார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...