முதலிரவில் மனைவியை தாக்கியது எதற்காக? வெளியான காரணம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

ஆந்திர மாநிலத்தில் முதலிரவில் மனைவியை தாக்கியது எதற்காக என்பது குறித்து கணவர் ராஜேஷ் பொலிசிடம் தெரிவித்துள்ளார்.

ஆசிரியராக பணியாற்றும் ராஜேஷ்(24) என்பவருக்கும், சைலஜத(20) என்ற பெண்ணுக்கும் கடந்த வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், முதலிரவின் போது தனது மனைவியை பிளேடால் ராஜேஷ் கீறியுள்ளார், இதில் ரத்த வெள்ளத்தில் அலறிய சைலஜாவை அவரது பெற்றோர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில் எதற்காக ராஜேஷ் இவ்வாறு செய்தார் என்பது குறித்து நடத்திய விசாரணையில், தனக்கு ஆண்மை குறைபாடு உள்ளதென மணமகன் ராஜேஷ் தனது மனைவியிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு சைலஜா அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து ராஜேஷிடம் சைலஜா கேள்வி கேட்டுள்ளார்.

ஆனால் இந்த விஷயத்தை யாரிடமும் வெளியே கூறக்கூடாது என ராஜேஷ் கூறியுள்ளார். ஆனால் தனது வாழ்க்கை பாழாகி விட்டதாக வெளியில் சென்று தனது தாயிடம் சைலஜா கூறியுள்ளார்.

இதனை கேட்ட மணமகளின் பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்திற்கு பின் முதலிரவு அறைக்கு வந்த தனது மனைவியை, ‘ஏன் இந்த விஷயத்தை வெளியே கூறினாய்?’ என கேட்டு ராஜேஷ் கண்மூடித்தனமாக அடித்துள்ளார்.

முதலிரவு அறையில் இருந்து மகளின் அலறலைக் கேட்ட அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் விரைந்து சென்று சைலஜாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்

இதுகுறித்து சைலஜாவின் பெற்றோர் கங்காதர நெல்லூர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில் ராஜேஷையும் அவரது பெற்றோரையும் அழைத்து விசாரித்தனர். தீவிர விசாரணைக்குப் பிறகு தனக்கு ஆண்மை குறைபாடு இருப்பதாக திருமணத்திற்கு முன்பே தெரியும் என்று கூறி தனது குற்றத்தை ராஜேஷ் ஒப்புக்கொண்டார்.

ராஜேஷையும் அவரது தந்தை குமாரசாமியையும் பொலிசார் கைது செய்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...