சென்னையில் நூதன முறையில் பிச்சையெடுத்த போர்ச்சுகல் வாலிபர்: வைரலாகும் வீடியோ

Report Print Raju Raju in இந்தியா
228Shares
228Shares
ibctamil.com

சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் அருகில் ஊருக்கு செல்ல பணம் இல்லாததால் போர்ச்சுகல் வாலிபர் ஒருவர் நூதன முறையில் பிச்சை எடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

போர்ச்சுகலை சேர்ந்த வாலிபர் ஒருவர் சொந்த நாட்டிற்கு செல்ல பணம் இல்லாததால் எழும்பூர் ரெயில் நிலையம் அருகில் நேற்று நூதன முறையில் வருவோர், போவோர்களிடம் பிச்சை கேட்டுக்கொண்டு இருந்தார்.

அதாவது, தான் கையில் வைத்திருந்த பந்தை வைத்து வித்தை காட்டி பிச்சை கேட்டார்.

டிராவல் டொனேசன் (பயணத்திற்கு தானம்) என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பதாகையை அருகில் வாலிபர் வைத்திருந்தார்.

இது குறித்து தகவலறிந்த பொலிசார் வாலிபரிடம் வந்து விசாரணை நடத்தினார்கள். பொலிசாரின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் அந்த வாலிபர் அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்ட நிலையில் அவர் பிச்சையெடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்