முதலிரவில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

Report Print Deepthi Deepthi in இந்தியா
1460Shares
1460Shares
ibctamil.com

ஆந்திர மாநிலத்தில் திருமணமான முதல்நாளில் தனது மனைவியை பிளேடால் அறுத்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மருத்துவரான சைலஜாவுக்கும், ஆசியரான ராஜேஷ்க்கும் நேற்று திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்து முதலிரவுக்காக ராஜேஷ் உள்ள அறைக்கு சென்ற சைலஜா சில மணி நேரத்திலேயே அறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

பின்னர் உறவினர்கள் சமாதானப்படுத்தி மீண்டும் அறைக்குள் அனுப்பி வைத்தனர். அப்போது, சைலஜாவின் உடலில் ராஜேஷ் பிளேடால் வெட்டியுள்ளார். இதனால் அவரது உடலின் பல்வேறு பகுதியில் இருந்து ரத்தம் வெளியேறியுள்ளது.

இதனால் மயங்கி விழுந்த சைலஜாவை பெற்றோர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர், மேலும் அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் ராஜேஷை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்