நடிகை ஜோதிகா மீது வழக்குப்பதிவு

Report Print Deepthi Deepthi in இந்தியா

இயக்குநர் பாலா மற்றும் நடிகை ஜோதிகா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் பாலாவின் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் நாச்சியார் படத்தின் டீசர் வெளியானது. அந்த டீசரின் இறுதியின் ஜோதிகா பேசும் "தே" என்ற வார்த்தை சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த வார்த்தைக்கு சமூக ஆர்வலர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்ததோடு, பாலாவுக்கு எதிராக மகளிர் அமைப்பு கண்டனத்தையும் தெரிவித்தது.

தற்போது, இவர்கள் இருவர் மீது மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் விசாரணைக்கு வரவிருக்கிறது என கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்