ஆர்.கே நகர் தேர்தலில் கமல் ஆதரவு இவர்களுக்கா? உச்சக்கட்ட எதிர்பார்ப்பு

Report Print Raju Raju in இந்தியா

ஆர்.கே.நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டால் அதற்கு கமல் ஆதரவு அளிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆர்.கே நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் டிசம்பர் 21-ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இத்தேர்தலில் நடிகர் கமல்ஹாசன் ஆதரவு யாருக்கு என்பது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

பாரதியார் போல முண்டாசு கட்டிக்கொண்டு டுவிட்டரில் டி.பி வைத்தபடி கமல் தமிழக அரசுக்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார்.

தனிக்கட்சி துவங்கப்போகிறேன் என்று ஏற்கனவே அறிவித்துள்ளார் கமல், கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் நெருக்கமாக உள்ள கமல் அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து அவ்வப்போது பேசியுள்ளார்.

எனவே ஆர்.கே.நகரில் மார்க்சிஸ்ட் போட்டியிட்டால் அதற்கு கமல் ஆதரவு அளிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி மற்றும், திரினாமுல் காங்கிரஸ் தலைவர்களுடன் கமல் நட்பு பாராட்டினாலும், அவ்விரு கட்சிகளும் ஆர்.கே.நகரில் போட்டியிடுவது சந்தேகம். எனவே கமல் விருப்பம் கம்யூனிஸ்ட்டுகளாக இருக்கலாம்.

அதேநேரம் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதையும் கமல் விரும்ப மாட்டார் என தெரிகிறது.

இருப்பினும் அதிமுகவை வீழ்த்த ஓரளவுக்கு கமலின் மறைமுக ஆதரவு தங்களுக்கு இருக்கவே செய்யும் என திமுவினர் நினைப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்