புகைப்படம் எடுக்க வந்த நபரை காலால் மிதித்து கொலை செய்த யானை

Report Print Deepthi Deepthi in இந்தியா

கொல்கத்தாவில் புகைப்படம் எடுக்க முயன்ற நபரை காட்டு யானை ஒன்று காலை மிதித்து கொலை செய்துள்ளது.

Jalpaiguri மாவட்டத்தில் உள்ள Lataguri காட்டுப்பதியின் பாதையில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

Sadik Rahman(40) என்ற நபர் Lataguri காட்டுப்பதி உள்ள நெடுஞ்சாலையில் காரில் பயணித்துள்ளார். அப்போது யானை ஒன்று காட்டுப்பகுதியில் இருந்து வெளியேறி ரோட்டில் வந்துள்ளது.

இதனைப்பார்த்த Sadik Rahman காரில் இருந்து இறங்கி, யானையை புகைப்படம் எடுப்பதற்கு அருகில் நெருங்கி சென்றுள்ளார். ஆனால் எதிர்பாராதவிதமாக யானை அந்த நபரை தனது காலால் மிதித்து தாக்கியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

பின்னால் வந்த வாகன ஓட்டிங்கள் இந்த சம்பவத்தை பார்த்து அதிச்சியடைந்துள்ளனர், யானை அந்த நபரை தாக்கும்போது இவர்கள் யாரும் அருகில் செல்வதற்கு அச்சப்பட்டுள்ளனர்.

நபரை கொன்றுவிட்டு 15 நிமிடத்திற்குள் காட்டுக்குள் சென்று யானை மறைந்துவிட்டதாக அங்கு நின்றிருந்த நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த பகுதியில் யானைகளின் நடமாட்டம் பொதுவாக இருக்கும் ஒன்று. கடந்த ஒரு வடத்தில் மட்டும் 84 பேர் யானை தாக்கி உயிரிழந்துள்ளனர் என்று வனத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்