தினகரனுக்கு ஆப்பு: கேவியட் மனு தாக்கல் செய்த ஓ.பி.எஸ்

Report Print Samaran Samaran in இந்தியா

இரட்டை இலை சின்னம் தொடர்பாக கேவியட் மனுவை உச்சநீதிமன்றத்தில் துணை முதல்வர் பன்னீர் செல்வம் தாக்கல் செய்துள்ளார்.

அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், கட்சியின் தலைமைக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் குரல் எழுப்பினார். இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் முறையிட, கட்சியின் அதிகாரபூர்வ சின்னமான 'இரட்டை இலை' சின்னம் முடக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக, லட்சக்கணக்கான பிரமாணப் பத்திரங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல்செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணிகள் ஒன்றிணைந்தது,

இதனால் சசிகலா மற்றும் தினகரன் ஆணி என்றும் முதல்வர் ஆணி என்று இரு பிரிவாக மாறியது அதிமுக் கட்சி . இதனைத் தொடர்ந்து இரு தரப்பினரும் இரட்டை இலை சின்னத்திற்காக போராடி வந்தனர்.

இந்தநிலையில் இரட்டை இலை சின்னம் முதல்வர் அணிக்குத்தான் சொந்தம் என்று தேர்தல் ஆணையம் நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

இதனைத் தொடர்ந்து டி டி வி தினகரன் சார்பில் நீதிமன்றத்தை நாடப்போவதாக அறிவிப்பு வெளியாகியது. டிடி வி தினகரன் நீதிமன்றத்தில் முறையீடு செய்வதற்கு முன்பாகவே ஒ.பி.எஸ் உச்சநீதிமன்றத்தில் இரட்டை இலை சார்பாக கேவிட் மனு தாக்கல் செய்தார்.

கேவிட் மனு தாக்கல் செய்வதால் இரட்டை இலை சின்னத்தை பற்றி யார் வழக்கு தொடர்ந்தாலும் அது தொடர்பாக தங்களிடம் பரிசீலனை செய்த பின்பு முடிவெடுக்க வேண்டும் . இதனால் தினகரன் அணிக்கு இது ஒரு பின்னடைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்