நடிகையுடன் இருந்த நித்யானந்தாவின் வீடியோ: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

Report Print Deepthi Deepthi in இந்தியா

கடந்த 2010 ஆம் ஆண்டு நடிகை ஒருவருடன் சாமியார் நித்யானந்தா உல்லாசமாக இருந்த வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிலிருப்பது நான் இல்லை என்றும் இது தவறாக சித்தரிக்கப்பட்ட வீடியோ என நித்யானந்தா கூறிவந்தார்.

இந்நிலையில் அந்த வீடியோ உண்மையானது தான் என டெல்லி தடவியில் ஆய்வின் மூலம் நிரூபணமாகியுள்ளது.

ஏழு ஆண்டுகளுக்குமுன் வெளியான 'வீடியோ' உண்மையானதுதான் என டெல்லி தடயவியல் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளதால் அவர் மீது நடவடிக்கை பாய வேண்டும் என கி. வீரமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலையைச் சேர்ந்த நித்யானந்தா என்ற ஒருவர் வேலையற்றுத் திரிந்த இளைஞன். சாமியார் 'பிசினஸ்'தான் முதலில்லா வியாபாரம் என்று புரிந்துகொண்டு, காவி வேடம் போட்டு, மிகப்பெரிய மடாதிபதிபோல் தன்னைக் காட்டிக்கொண்டார்.

இதன் மூலம், பல கோடி ரூபாய் சொத்து சேர்த்து, தன்னுடன் ஒரு ரவுடிக் கும்பல், அடியாட்களை வைத்துக்கொண்டு தனது சாம்ராஜ்ஜியத்தை சல்லாப ராஜ்ஜியமாக்கிக் கொண்டு சொகுசு வாழ்வு வாழ்வதுபற்றி ஏடுகள் பல செய்திகளை வெளியிட்டன,

குடும்பத்தில் உள்ள இளம்பெண்களுக்கு மூளைச்சாயம் ஏற்றி, அழைத்து வருவது, அங்கே ‘ஆன்மீகம்‘ என்ற பெயரால் பல்வேறு நிகழ்வுகளை நடத்துவது வேடிக்கையான வாடிக்கையாகும்.

இப்படிப்பட்ட நவீன சாமியார்கள் மின்னணு யுகத்தில் வாழ்வதால், அத்தனை மின்னணு (Electronic Gadgets) கருவிகளையும் தங்களை விளம்பரப்படுத்திட புது வகை டெக்னிக்குகளைக் கையாண்டு, அறியாமையிலும், பக்தி போதையிலும் உழலும் பல பெண்களின் வாழ்வை நாசமாக்கும் சமூக விரோத செயல்களைத் தங்கு தடையின்றி நடத்தி, சுகபோக வாழ்வு வாழ்கின்றனர்!

ஏழு ஆண்டுகளுக்குமுன் நடிகையுடன் சல்லாப சரச லீலையில் ஈடுபட்டதையெல்லாம் - அவரது காரோட்டி லெனின் கருப்பையாமூலமும், வீடியோ மூலமும் வெளியானது.

போலி என்ற இவர் தரப்பு வாதம் பொய்யாக்கப்பட்டு, அது உண்மைதான் என்று அறிவிக்கப்பட்டு விட்டது. இவரையும், இவரது கும்பலையும் உடனே கைது செய்து, சிறையில் அடைப்பதோடு உரிய தண்டனையும் வழங்கப்படவேண்டும்.

அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள்மீது நடத்தப்படும் சோதனைபோல, வருமான வரித்துறை இந்த மடாதிபதிகளின் கூடாரங்களிலும் சோதனை நடத்திடவேண்டும்.

இளைஞர்களே, மகளிர் தோழியர்களே! ஏமாறாமல் இருக்க இப்படிப்பட்டவர்களது கழற்றப்பட்ட காவி முகமூடிகளின் யோக்கியதைகளைப்பற்றி நாடெலாம், உலகெலாம் பாயும் வண்ணம் பிரச்சாரம் செய்யுங்கள்! அரசும், காவல்துறையினரும் இதற்கான ஒரு தனிப் பிரிவையும் உண்டாக்கி, தொடக்கத்திலேயே இதனைத் தடுத்து ஒழித்திட ஆவன செய்யவேண்டும் என்பதை வற்புறுத்துகிறோம். 2018 இல் இந்த முழக்கப் பிரச்சாரம் நம்மால் தீவிரப்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்