ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தல் திகதி அறிவிப்பு

Report Print Raju Raju in இந்தியா

ஆர்.கே நகர் தொகுதிக்கு டிசம்பர் மாதம் 21-ஆம் திகதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்ததையொட்டி அவர் எம்.எல்.ஏ-வாக வென்ற சென்னையின் ஆர்.கே நகர் தொகுதி காலியானது.

ஏற்கனவே இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த முடிவெடுக்கப்பட்ட நிலையில் தொகுதி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக எழுந்த புகாரின் பேரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் டிசம்பர் மாதம் 21-ஆம் திகதி ஆர்.கே நகர் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்கான வேட்புமனுக்கள் மீதான பரீசீலனை டிசம்பர் 5-ல் நடைபெறும் எனவும், மனுக்களை திரும்ப பெற கடைசி நாள் டிசம்பர் 7-ஆம் திகதி எனவும் கூறப்பட்டுள்ளது.

தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 24-ஆம் திகதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்