ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்தது ஏன்?

Report Print Kabilan in இந்தியா

அதிமுகவின் சின்னமான இரட்டை இலையை மதுசூதனன் அணியினருக்கு வழங்கியதற்கான காரணத்தை தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

சின்னம் தொடர்பாக 83 பக்கங்கள் கொண்ட தீர்ப்பினை, தலைமை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.

அதில், கடந்த மார்ச் 22ஆம் திகதி இரட்டை இலையை முடக்குவதாக பிறப்பித்த உத்தரவை திரும்ப பெறுகிறோம்.

மதுசூதனன் தலைமையிலான அணியே இனி அதிமுக என்ற பெயரை பயன்படுத்தும்.

ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணியின் இரட்டை இலை சின்னம், கட்சிக்கொடி, அதிகாரப்பூர்வ கடிதம் போன்றவற்றை முதலமைச்சர் அணி பயன்படுத்தலாம்.

அமைப்பு ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் தலைமையிலான அணியே பெரும்பான்மை பெற்றுள்ளது.

முதல்வர் அணிக்கு 111 எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளது. தினகரன் அணிக்கு தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேர் உட்பட, 20 எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்