அம்மா வயது பெண்ணுடன் பழக்கம்: இளைஞரின் பரபரப்பு வாக்குமூலம்

Report Print Raju Raju in இந்தியா

கள்ளக்காதலியை கொலை செய்தது குறித்து இளைஞர் பொலிசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 19-ஆம் திகதி ஓடைக்கரை பகுதியில் சடலமாக கிடந்தார்.

விசாரணையில் அவர் ஜம்ஜம் நகரை சேர்ந்த டீ மாஸ்டர் இக்பால் மனைவி மம்முதா பீவி (41) என்பது தெரியவந்தது.

இந்நிலையில் முத்தோப்பு பகுதியை சேர்ந்த விக்னேஷ் (20) என்பவர் இந்த வழக்கு தொடர்பாக பொலிசில் சரணடைந்தார்.

அவர் மம்முதா பீவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக பொலிசார் கூறுகையில், கடந்த 3 ஆண்டுக்கு முன்பு மம்முதா வீட்டில் கட்டிட வேலைக்கு சென்றபோது அவருடன் விக்னேசுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

இதையறிந்த இக்பால் பலமுறை மனைவியை கண்டித்தும் மம்முதா கேட்கவில்லை.

மேலும், விக்னேசிடம் மம்முதா பணம் கேட்டு அடிக்கடி தொல்லை கொடுத்துள்ளார்.

இவர்களின் கள்ளக்காதல் ஊர் முழுவதும் தெரிந்துள்ளது.

இளம் வயதிலேயே தனது பெயர் கெட்டுவிட்டதாலும், மம்முதா அடிக்கடி பணம் கேட்டு தொல்லை கொடுத்ததாலும் விக்னேஷ் வெறுப்படைந்துள்ளார்.

சம்பவத்தன்று போன் மூலம் விக்னேசை மம்முதா அழைத்துள்ளார், அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த விக்னேஷ் மம்முதாவை கீழே தள்ளி புடவையால் கழுத்தை இருக்கி கொலை செய்துவிட்டு அடையாளம் தெரியாமல் இருக்க ஆசிட்டை முகத்தில் ஊற்றிவிட்டு தப்பி சென்றதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட விக்னேஷை பொலிசார் சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்